Monday, November 23, 2009

சாய்பாபாவின் மறுபக்கம் மக்கள் தொண்டு


: * அன்பே சிவம். சிவமே அன்பு. அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருப்பார்.
ஆழ்ந்த அன்பு கொண்டு மக்களுக்கு அன்பு செய்யுங்கள். உங்களிடம்
ஊற்றெடுக்கும் அன்பினை தொண்டாக மாற்றுங்கள்.
* நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். வெளியுலக வாழ்வில் எத்தனை
யோ சூழ்நிலைகள் நம்மைப் பாதிக்கின்றன. அப்போது அச்சூழ்நிலை நம்மைத்
தாக்காதபடி, நம்பிக்கையே கவசம் போல் பாதுகாக்கும்.
* நல்லனவற்றை தேடிச் சென்று கேளுங்கள். நல்லதை மட்டுமே காணுங்கள்.
நல்ல செயல்களைச் செய்யுங்கள். அப்போது நீங்கள் இறையருளைப் பூரணமாகப்
பெறுவதற்கு தகுதி உடையவராவீர்கள்.
*மிருகவுணர்ச்சி மேலோங்கினால், நாம் அழிவுப் பாதைக்குச் சென்று விடுவோம்.
தீமையை நன்மையால் வெல்வதைப் போல, மிருக உணர்ச்சியைக் களைந்து
தெய்வீக உணர்வினை உள்ளத்தில் பரவவிடுங்கள்.
* மேலான செல்வம் இறையருள் மட்டுமே. கடவுளிடம் எள்ளளவும் சந்தேகம்
கொள்ளாமல் முழுமையாகச் சரணாகதி அடைந்து விட்டால், கண்ணை இமை
காப்பதுபோல நம்மைக் காத்து கரை சேர்ப்பான்.
* தயிரை மத்தினால் கடையக், கடைய மோர் தனியாகவும், வெண்ணெய் தனி
யாகவும் பிரியத் துவங்கும். அதுபோல, ஆன்மிக சக்தியால் உள்ளத்தைக்
கடைந்தால் அசத்தியம் விலகி சத்தியமாகிய கடவுள் வெளிப்படுவார்.
* முற்றும் உணர்ந்தவர்கள் மவுனமாக இருப்பார்கள். அவர்களின் ஒரே மொழி
அமைதி மட்டுமே. பேச்சில் நிதானத்தைப் பழகிக் கொள்ளுங்கள். மவுனத்தைப்
பழகப் பழக நம்மிடம் உள்ள ஆற்றல் வெளிப்படத் துவங்கும்.
* கடவுள் நம்பிக்கை வேண்டாத பரபரப்பு, பயம், அறியாமை, கவலை ஆகிய
வற்றைத் தோற்றுவிக்கும் வேர்களைக் களைந்துவிடும். கடவுளை நம்புபவர்
முகத்தில் கவலை ரேகைகள் படர்வதில்லை. நடப்பன யாவும் நல்லதற்கே,
நடப்பதெல்லாம் அவன் விருப்பப்படி தான் என்ற சிந்தனை மேலோங்கும்.
* அடுத்தவர் மீது குற்றம் காணவும், குறை சொல்லவும் நமக்கு உரிமை இல்லை.
அவர்களிடம் கோபப்படவும் உரிமை கிடையாது. நம்மை நாமே தூய்மையாக்கிக்
கொண்டு நல்லவனாக வாழ முயற்சிக்க வேண்டும்.
* நம் வாழ்நாள் பனிக்கட்டி போல உருகிக் கொண்டே போகிறது. பிறவி எடுத்ததன்
நோக்கத்தை உணரத் தலைப் படுங்கள். கடவுளோடு நம்மை இணைத்துக் கொள்
ளும் மேலான நிலைக்கு முன்னேறுங்கள்.
* எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். ஒவ் வொருவர் வாழ்விலும் நான்கு
நாட்களே சிறப்பான நாட்கள். பக்தர்கள் ஒரே இடத்தில் கூடி கடவுளின் பெருமை
யைப் பாடும் நாள், பசித்தவர்களுக்கு பசியாற உணவிடும் நாள், சாதுக்கள், நல்ல
வர்களைச் சந்திக்கும் நாள், தனிமனிதனுக்கு ஞானம் பிறக்கும் நாள்.
*வெற்றி பெறும்போது, பலரும் கடவுளை மறந்து விட்டு தன் முயற்சியால்
வெற்றி வந்ததாக எண்ணி ஆணவம் கொள்கின்றனர். தோல்வியின் போதோ
நம்பிக்கை இழந்து கடவுளை நிந்திக்கிறார்கள். ஆனால், உண்மையான பக்தி
உள்ளவன் தன் மனச்சமநிலையை எப்போதும் இழப்பதில்லை.
* மனிதன் இயற்கையிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல இருக்
கின்றன. பசு பால் தந்து உலகைக் காக்கிறது. ஆறு நீரைத் தந்து உயிர்களைக்
காக்கிறது. அறிவில் குறைந்த பறவை, விலங்கினங் களிடமிருந்து பொது நல
மனப் பான்மையை மனிதர்கள் பெற்று வாழ வேண்டும்.


தவித்த வாய்க்கு தண்ணீர் தந்தவர் : பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு
தேவை என்பதை அறிந்த சாய்பாபா பல திட்டங் களை செயல் படுத்தியுள்ளார்.
1994ல் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட் டத்திலுள்ள 750 கிராமங் களில்
வசிக்கும் 9லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டம் செயல்
படுத்த பட்டது. இதற்கு 284 கோடி ரூபாய் செல விடப்பட்டது. இதற் காக
ஆந்திர அரசின் நிதி பங்களிப்பு எதுவும் கிடையாது. சத்யசாய் டிரஸ்ட் மூலமே
இந்தப் பணம் கொடுக்கப் பட்டது. இந்த திட்டத்தை பிரபல நிறுவனமான லார்சன்
அன்ட் டூப்ரோ அமைத்துக் கொடுத்தது. இந்த திட்டத்தின் விசேஷ அம்சம் என்ன
வென்றால், 9 லட்சம் மக்கள் பயன்பெறும் இந்த திட்டம் எதிர் காலத்தில் மக்கள்
தொகை அதிகரித்தாலும் கூட, அதாவது 12.50 லட்சம் மக்களுக்கு பயன்படும்
வகையில் செயல் படுத்தப் பட்டது குறிப்பிடத் தக்கது. 750 கி.மீ., தூரத்துக்கு
மெயின் குழாய்களும், 1550 கி.மீ., தூரத்துக்கு கிளை குழாய்களும் அமைக்கப்
பட்ட இந்த பிரம்மாண்ட திட்டத்தில் 40 ஆயிரம் முதல் 3 லட்சம் லிட்டர் கொள்
ளளவு உடைய 268 மேல்நிலைத் தொட்டிகளும் அமைக்கப்பட்டன.ஆன்மிகம்
என்பது பொதுச்சேவையே என்பதை பாபா இதன்மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.


ஒன்லி சர்விங்... நோ பில்லிங் : ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தியிலும்,
பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியிலும் இலவசமாக அனைத்து மருத்துவ உதவி
களையும் வழங்கி வரும் சத்யசாய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி இயங்கி
வருகிறது. இங்கு வரும் நோயாளி களுக்கு அர்ப்பணிப்பு மற்றும் மனித நேய
உணர்வுடன் சேவை செய்யப்படுகிறது. அனைவருக்கும் முற்றி லுமாக இலவச
மருத்துவ சேவை செய்வது இன்னும் விசேஷம். சாய்பாபாவின் அன்னை
ஈஸ்வரம்மா புட்டபர்த்தியில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு
மருத்துவ மனை அமைக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை மகனிடம்
தெரிவித்தார். பாபாவும் அம்மாவிடம் சரியான சந்தர்ப்பத்தில் அந்த விருப்பத்தை
நிறைவேற்ற உறுதியளித்திருந்தார். அதன்படி, பிரசாந்தி நிலையத்தில்
1954, நவம்பர் 23ல் இம் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு1956ம்
ஆண்டு அக்டோபர் 4ல் திறந்து வைக்கப் பட்டது. தொடக்க காலத்தில்
12 படுக்கைகள் கொண்ட சிறு மருத்துவமனையாக இருந்தது. 1982
நவம்பர்23ல், நவீனவசதிகளைக் கொண்ட புதிய மருத்துவமனைக்கு
அடிக்கல் நாட்டப்பட்டு,1984 பிப்ரவரி29ல் தொடங்கப் பட்டது. இதில்
அறுவை சிகிச்சை, ரத்தவங்கி, நவீன லேப்வசதி, தீவிர சிகிச்சை பிரிவு,
எக்ஸ்ரே பிரிவு, கண், பல் மருத்துவம் போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்
பட்டன. இதன் பிறகு புட்டபர்த்தியின் நுழைவுப் பகுதியில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி
ஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டுவிழா 1990 நவம்பர் 22ல் நடந்தது. மிகவும் அதிசயத்
தக்க வகையில், 1991 நவம்பர் 22 ல் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவால்
மக்களுக்கு அர்ப்பணிக்கப் பட்டது. தொடங்கிய 15வது நிமிடத்தில் முதல் அறுவை
சிகிச்சையும் நடந்தது. மூன்று மணி நேரத்திற்குள்ளாக 4 அதிநவீன அறுவை சிகிச்
சைகள் நடந்து முடிந்தது ஆச்சரியப் படத்தக்கதாக இருந்தது. நாட்டின் பல இடங்
களில் இருந்தும் வரும் நோயாளிகளுக்கு முன்னணி மருத்துவர்கள் இங்கு
மருத்துவப்பணி செய்கின்றனர். இதய, சிறுநீரக, நரம்பு, கண் சம்பந்தமான
பிரச்னைகளுக்கும் அந்தந்த பிரிவு சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.


இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது முதல் 2009 மார்ச் வரை 16 லட்சத்து
96ஆயிரத்து 719 நோயாளிகள் பலன் பெற்றுள்ளனர். இதய நோய்க்காக
8 லட்சத்து18 ஆயிரத்து 831 நோயாளிகள் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.
2006ம் ஆண்டு பார்வையாளராக இங்கு வந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்
கலாம், ""கடவுளின் அருளாட்சி இங்கு நடக்கிறது. இங்கிருக்கும் மருத்துவர்களும்,
பணியாளர்களும் தேவதை களைப் போல இருப்பதை உணர்ந்தேன்'' என்றார்.
இங்கு வரும் நோயாளிகள் "ஒன்லி சர்விங், "நோ பில்லிங்' என்று சொல்லிச்
செல்வதைக் காண முடியும்.

3 comments:

இலங்கைத் தமிழ்ப் பதிவர் said...

அன்பின் பதிவர்,

இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு சம்மந்தமாக இங்கே சென்று விபரங்களை அறிந்து உங்கள் வருகையை உறுதிப்படுத்த அங்கே பின்னூட்டமொன்றை இட்டுவிடுங்கள். நீங்கள் வெளிநாட்டிலுள்ள இலங்கைப் பதிவராயின் நேரடி ஒளிபரப்புப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.

அன்புடன்,

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - அமைப்புக் குழு

M.Thevesh said...
This comment has been removed by the author.
Thevesh said...

இ.த.ப.சந்திப்புக்குளுவினர்க்கு உங்கள்
அழைப்புக்கு மிக்க நன்றிகள்.