Friday, August 28, 2009

[இலங்கைத் தமிழர் பிரச்சினை]

ஈழத்தமிழர் பிரச்சினை என்றால் என்ன என்பது
நூறு சத வீதமான இந்தியர்களுக்குத்தெரியாது.
அவர்களுக்கு இந்தியச்சரித்திரமே தெரியாதது
இவர்களுக்கு எப்படி ஈழத்தமிழர் பிர்ச்சினை புரியும்.
அதனால் விரிவாக ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி
ய அறிவை இந்தியத்தமிழர்களுக்கு தெரியவைக்க
முயற்சிக்கிறேன்.அதிலும் குறிப்பாக சித்தூர் எஸ்
முருகேசன் போன்றவர்களுக்கு இது சமர்ப்பணம்.

இலங்கையின் பூர்வீக குடிகளே தமிழர்கள் என்பது
பெரும்பாலனவர்களுக்குத்தெரிவதில்லை.
1505ல் போர்த்துக்கீசர் இலங்கையைப்பிடிக்கும்
போது இலங்கையில் தனித்தனியான மூன்று
இராச்சியங்கள் இருந்திருக்கின்றன. அதில் இரண்டு
சிங்கள இராச்சியங்களும் ஒரு தமிழ் இராச்சியம்
என்று சொல்கின்ற யாழ்ப்பண இராச்சியம் வடக்கு
கிழக்கு இணைந்த பகுதியில் இருந்திருக்கிறது.இது
சம்பந்தமான ஆவணங்கள் இன்றும் போர்த்துக்கல்
அரசு ஆவணக்காப்பகத்தில் பாதுகாப்பாகவைத்திருக்
கிறார்கள்.

1779ல் டச்சுக்காரர் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்
பற்றினார்கள். இவர்கள் காலத்தில் தேசவழமைச்சட்டம்
Roman Dutch Law வையும் நடைமுறைக்குக்கொண்டு
வந்தார்கள். இன்றும் யாழ்ப்பாணத்தில் இவர்களால்
அறிமுகப்படுத்தப்பட்ட தேசவழமைச்சட்டம் தான்
நடைமுறையில் இருந்து வருகின்றது.

பிரித்தனியர் 1789ல் மூன்று இராச்சியங்களையும்
வெவ் வேறு காலப்பகுதியில் கைப்பற்றினார்கள்.
அவர்கள் ஆவணங்களிலும் தனித் தனியாக இறமை
யுள்ள மூன்று இராச்சியங்கள் இருந்ததை ஆவணப்
படுத்தியுள்ளார்கள். இன்றும் லண்டனில் உள்ள குடி
யரசு ஆவணப்பகுதியில் இவற்றை யாரும் பார்வை
யிடலாம்.மூன்று இராச்சியங்களையும் தனித்தனியாக
நிர்வகித்த பிரித்தானியர் 1815ல் ஏற்பட்ட கண்டி உடன்
பாடு காரணமாக நிர்வாக வசதிக்காக மூன்று இராச்சி
யங்களையும் ஒன்றாக்கி ஏக இலங்கை யாக 1948ம்
வருடம் வரை ஆண்டார்கள்.

இந்தியத்தலைவர்கள், தமிழ்நாட்டுத்தலவர்கள் உட்பட
இலங்கைத்தமிழர்கள் பிரித்தனியரால் தோட்டத்
தொழிலாளர்களாகக்கொண்டுபோனவர்கள்தான் எனறு
தவறாக நினைக்கிறார்கள்.

1648 ல் பிரித்தானியர் தோட்டத்தொழிலாளராக இந்தி
யத்தமிழரைக் கொண்டுவருமுன்பே இலங்கையின் வடக்
கு கிழக்கு மாகாணங்களில் இலங்கைத்தமிழர்கள் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்.5 ஆயிரம் வருடங்களாக வடகிழக்கு
மாகாணங்களில் தமிழர் பூர்வீக குடிகளாக வாழ்ந்து கொண்
டிருக்கிறார்கள் என்பது சரித்திர பூர்வமான உண்மை.

தினகரன், தினமணி, இந்து பத்திரிகைகளில் எழுது
வதைப்படித்துவிட்டு அதுதான் இலங்கைத்தமிழர்
சரித்திரம் என நினைகும் ஞானசூன்யங்கள் நிறைந்த
இடம்தான் தமிழநாடு மாநிலம். அண்ணாத்துரை,
இராஜாஜி, ம.பொ.சி, பெரியார் போன்றவர்களுக்கு
நான் எழுதியுள்ள இலங்கைத்தமிழர் சரித்திரம் அத்து
படி அதனால்தான் 1967ல் சிறிமாவோ சாஸ்திரி ஒப்
பந்தம் கையெழுத்தானவுடன் அறிஞர் அண்ணா
"வீழ்ந்து பட்டதமிழர்கள்" "துரத்தி அடிக்கப்பட்ட
தமிழர்கள்" என இரு பிரிவுத்தமிழர்கள் இலங்கை
யில் வாழ்கிறார்கள் எனத்தெரிவித்திருந்தார்

இந்தியசரித்திரமே ஆக்கபூர்வமாகத்தெரியாத கிணற்றுத்
தவளைகளுக்கு இலங்கைத்தமிழர் சரித்திரம் எப்படித்
தெரியும். அதனால் தான் தெரியாமல் உளறவேண்டாம்
என்று கத்துக்குட்டியான சித்தூர்.எஸ்.முருகேசனுக்குத்
தெரிவித்திருந்தேன்.கற்றது கைமண் அளவு கல்லாதது
உலகளவு என்று ஆன்றோர் சொல்லியுள்ளார்கள்.எனக்
கு எல்லாம் தெரியும் என்று அகம்பாவத்துடன் துள்ளிக்
குதிப்பவர்கள் எதுவும் தெரியாத கத்துக்குட்டிகள் என்று
நான் கூறுகிறேன்.அது இந்தச் சித்தூர்.எஸ்.முருகேசன்
போன்றோருக்கும் பொருந்தும்.

1948 ல் இலங்கைக்கு சுதந்திரம் கொடுக்கும் போது
இலங்கைத்தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க அரச
மைப்புச்சட்டத்தில் 29 வது சரத்து என்று ஒன்றைச்
சேர்த்திருந்தார்கள். அதை 1972 ல் கொண்டுவந்த
புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் நீக்கிவிட்டார்
கள்.இதை எதிர்க்கவேண்டிய பிரித்தனியர் அமைதி
யாக் இருந்து விட்டார்கள்.பிரித்தானியர் விட்ட
பிழையால் இலங்கைத்தமிழர் இவ்வளவு சொல்லொ
ணாத்துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.

1956 ல்,1958 ல்,1961 ல்,1962 ல்,1972 ல்,1977 ல்,
1983 ல் ந்டைபெற்ற தமிழர் அழிப்பு எல்லாம் பிரபாக
ரனின் கட்டமைபு வருமுன் நடைபெற்றவை.இவை
நடந்த காரணங்களால்தான் பிரபாரனின் கட்டமைப்பு
ஏற்படவேண்டிய தேவை ஏற்பட்டது. இலங்கைத்தமி
ழர் பிரச்சினைக்கு பிரபாகரன் காரணமில்லை.சிங்க
ளவரின் பேரினவாத அரிசியல் தான் காரணம் என்பதை
அறிந்துகொள்ளவும்.

பூர்வீக குடிகள்தான் தாங்கள் இழந்த உரிமையைக்கேட்கிறார்
களே அல்லாமல் வந்தேறு குடிகள் அரசுரிமை கேட்க
வில்லை என்பதை அறிந்துகொள்ளவும்.

1 comment:

Chittoor Murugesan said...

அன்புடையீர் !
//மூன்று இராச்சியங்களையும் தனித்தனியாக
நிர்வகித்த பிரித்தானியர் 1815ல் ஏற்பட்ட கண்டி உடன்
பாடு காரணமாக நிர்வாக வசதிக்காக மூன்று இராச்சி
யங்களையும் ஒன்றாக்கி ஏக இலங்கை யாக 1948ம்
வருடம் வரை ஆண்டார்கள்.//

இது தங்கள் பதிவின் ஒரு பகுதியே. நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள், இலங்கை ஏக இலங்கையாக ஆளப்பட்டது என்று. ஏக இலங்கையில் வாழும் தமிழர்கள் தனி தமிழீழம் கேட்பது என்பது ஒரு மிரட்டலாக , தமது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள் மேற்கொள்ளும் போராட்டத்திலான வியூகத்தில் ஒரு பாகமாக இருக்கலாமே தவிர அதுவே லட்சியமாகிவிடக்கூடாது.

இலங்கையின் இடத்தில் இந்தியாவை கற்பனை செய்துகொள்ளுங்கள். தனி நாடு கோரிக்கையை கைவிட்ட அண்ணாவை நினைத்து பாருங்கள்.