Saturday, October 31, 2009

விசித்திரமான மிருககாட்சிசாலை

அந்த மிருக காட்சிசாலை அழகாகவும் பல கூடாரங்களைக்
கொண்டதாகவும் காட்சியளித்தது. சில கூடரங்களில் இரு
மிருகங்கள் காட்சிதந்தன. வேறு சிலகூடாரங்களில் ஒரே
ஒரு மிருகம் கண்களில் கண்ணீருடன் வலம் வந்துகொண்
டிருந்தது. இப்படிப் பல கூடாரங்களில் பல அடைக்கப்பட்டி
ருந்தன. இந்தக் கூடாரங்களில் உள்ள மிருகங்கள் எல்லாம்
வெள்ளை முடிகளுடன் காட்ச்சியளித்தன. அத்துடன் நாடி
விழுந்து தோல் சுருக்கங்களுடன் காணப்பட்டன. பெரும்
பாலும் எல்லாமிருகங்களின் கண்கள் பனித்தே காணப்பட்
டன.சிலதுகளின் பார்வை எங்கோ தொலைவில் உள்ள
ஒன்றை நோக்கியும் கூடுதலான் எதிர்பார்ப்புகளுடனும்
அதுவும் தங்களுக்கு மிக வேண்டியவர்கள் வருவார்கள்
என்ற எதிர்பார்ப்புகளுடனும் காணப்பட்டார்கள். அல்லது
வலி இல்லாத சடுதியான மரணம் வரமாட்டாதா என்ற
எதிர்பார்ப்பு என்றும் சொல்லலாம்.

இந்த விசித்திரமன சூவுக்கு வந்த விருந்தினர்களோ வெகு
சிலரே. ஒன்றில் வார இறுதியில் வருபவர்களாகவோ அல்
லது வருடம் ஒரு தரம் தூரதேசத்திலிருந்து வருபவர்களா
கவோ காட்சியளித்தார்கள். அப்படி வந்த விருந்தினரும்
மிருகங்கள் இருக்கிற எல்லாக்கூடாரமும் போகவிரும்ப
வில்லை. ஒரு சில கூடாரங்களுக்குச் சிரித்த முகத்துடன்
சென்றார்கள். அவர்களின் சிரிப்பில் உண்மையும் இல்லை
சந்தோசமும் இல்லை.

அதிசயமாக சில விருந்தினர் பரிசுப்பொருள்களுடனும் வந்
திருந்தார்கள். அவர்கள் பார்க்க வந்த மிருகங்கள் வயோதி
பத்தின் கடைநிலை உள்ளவர்களாகத்தோன்றினார்கள்.
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத்தெரிந்தது வந்த விருந்
தினர் யாவரும் சிறிது கூட நேரம் அங்கு இருந்தால் விஷத்
தொற்று ஏற்பட்டுவிடுமோ எனப்பயந்து திரும்பிப்போவதிலெ
யே அவசரங்காட்டினார்கள்.

வந்த விருந்தினர்களுக்கு அவர்கள் பசி எடுத்து அழுதபோது
இந்த விசித்திர மிருக காட்சிசாலையில் உள்ள மிருகங்கள்
தான் தன் முலைப்பாலை ஊட்டி அவர்களின் பசியைப்போக்
கியவர்கள். இந்த மிருகங்கள்தான் அவர்களுக்கு உணவு ஊட்டி
அன்பைக்கொடுத்து பாதுகாப்பையும் கொடுத்தார்கள். இவர்கள்
பசியாக இருந்த போது தங்களுக்கு உணவு இல்லாத போதும்
தாங்கள் பசியுடன் இருந்துகொண்டு இவர்கள் பசியைப்போக்கி
யவர்கள்.இந்த மிருகங்கள் வலிக்க வலிக்க வேலைசெய்ததால்
தான் இவர்கள் நல்லபள்ளிக்கூடங்களில் படிக்கமுடிந்துள்ளது.

விருந்தினர்கள் வந்து போன மிருகங்களுக்கு அந்த மாலைப்பொ
ழுது பெரிதாகப்பட்டது. மாலைச்சாப்பாட்டுக்காக கையில் தட்டு
டன் அழையாவிருந்தாளியாக அன்பில்லாத உணவைப் பங்கு
போட வந்தவர்களில் ஒன்று அவன் வந்து கமரா, லாப் ரொப்
கணாணி மற்றும் செல் போன் தந்துவிட்டுப்போகிறான் என்றது.
அடுத்த கூடரத்தில் இருந்த மிருகம் கெக்கட்டம் போட்டுச்சிரித்து
விட்டு அவர்கள் இதை எல்லாம் உன்னுடன் சேர்த்துப்புதைக்கப்
போகிறார்களா என்று கேட்டது.


(வயோதிபர் இல்லங்களின் உண்மை நிலையை இப்படிவிபரிக்கிறான்)

3 comments:

Unknown said...

நிறைய நாட்களாக சில பல விடயங்களால் பதிவுகளுக்கு பின்னூட்டமிடவோ, பதிவுகளை வாசிக்கவோ முடியாமல் போய்விட்டது...
இப்போது தான் சந்திப்பு எல்லாம் முடிந்து சிறிது நிம்மதி....

இங்கும் முதியோர் இல்லங்கள் அதிகம் தான்...
முதியோர் இல்லங்கள் முதியவர்களுக்கு நன்மையை தருவதற்காகத் தொடங்கி இப்போது அதுவே அவர்களை அழிக்கத் தொடங்கிவிட்டது...

M.Thevesh said...

கனககோபி said...
" முதியோர் இல்லங்கள் முதியவர்களுக்கு நன்மையை தருவதற்காகத் தொடங்கி இப்போது அதுவே அவர்களை அழிக்கத் தொடங்கிவிட்டது... "

அதுதான் காலத்தின் நியதிபோலும்.உங்
கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அன்புடன் நான் said...

நல்ல பதிவுங்க... ஆனா அந்த முதியோர் இல்லம்... எனக்கு கோயிலாகத்தான் தெரிகிறது... அங்கேத்தான்ங்க... தெய்வங்கள் வாழ்கிறது.