Monday, September 28, 2009

கடவுள், காதல், பணம் அழகு என் பார்வையில்

அரூபமான கடவுள், கலப்படமில்லாக் காதல், விரட்டிப் பிடிக்கும் பணம், ஆராதிக்கும் அழகு.

மற்றுமொரு தொடர் பதிவு.

பலர் எழுதி விட்டார்கள் சிலரின் விளக்கம் என்னையும்
விளக்கங்கொடுக்கத்தூண்டியது. அதனால் யாரும் அழைக்
காமலே தொடரில் நுளைகிறேன் வரவு எப்படியிருக்குமோ
நான் அறியேன்.

முதலில் கடவுள்.

எம்மை மீறிய ஒரு சக்தி தொழில்படுகிறது. அது கடவுளா
இல்லையா. சிலர் இயற்கை என்கின்றனர். வேறு சிலரோ
சட்டதிட்டங்களுக்காக கடவுளைக்கொண்டுவந்தார்கள்
என்கின்றனர்.ஆசாரம் மிக்க இந்துக் குடும்பம் என்பதால்
ஒரு காலத்தில் கடவுள் நம்பிக்கை இருந்தது. ஆனால்
இன்று 50,000 மக்களைக்காப்பாற முடியாத கடவுள் இருந்
தால் என்ன இருக்காவிட்டால் என்ன என்றாயிற்று
யாருக்கும் தீமைசெய்யாது சத்தியவந்தனாக வாழ்ந்தால்
கடவுளைத்தேட வேண்டியஅவசியமில்லை.

காதல்.

காமம் கலந்ததுதான் மானிடக்காதல். ஒருசிலர் தெய்வீகக்
காதல் என்பர். உடல் சங்கமத்தை நாடும் காதல் எப்படிதெய்
வீகக்காதலாகும். காதல் ஒரு பருவத்தில் இன்றியமையா
தது.வாழ்வில் காதல் வந்து போனது ஆனால் பாதிப்பு அடை
யவில்லை. நான் என் மனைவியை ஆழமாக நேசிக்கிறேன்.

பணம்.

இந்த உலகையே ஆட்டிப்படைப்பது இந்தப்பணமே.இது
இல்லாவிட்டால் ஒரு அணுவும் அசையாது. பணத்தைத்
தேடி ஓடும் ஓட்டம் பலருக்கு கலாசாலைப்படிப்பு முடிந்
ததும் தொடங்கிவிடுகிறது பணத்தைத்தேடி ஓடுவதில்
இளமையைத்தொலைத்து முதுமைவரும்வரை ஓய்வில்லா
ஓட்டமாகிறது. இவர்கள் வாழ்கையை அனுபவிப்பதில்லை.
ஒரு சிலர் வசதியான பின்னணியில் வாழ்கையை ஆரம்
பிப்பதால் ரசித்து அனுபவித்து வாழ்கிறார்கள். பணம்
எனக்கு என்றும் பிரச்சினையாக இருந்ததில்லை.மற்ற
வர்களுக்கு உதவ எனக்குப் பணம் தேவைப்படுகிறது.
அதனால் அதை நோக்கிய பயணம் தொடர்கிறது. இருந்
தும் நான் திருப்தியாக வாழ்கிறேன்.

அழகு.

மனநிலையைப் பொறுத்ததுதான் அழகு.அழகை ரசிக்க
நுண்ணிய மனம் வேண்டும். கலாரசிகனாலேயே அழகை
ஆராதிக்கமுடியும். குழந்தையின் சிரிப்பு எல்லோருக்கும்
அழகாகவே தோன்றும்.யார் அழகு ஆணா அல்லது பெண்ணா
எனக்கேட்டால் காவியங்கள் பெண்ணை அழகு என வர்ணித்
தாலும் ஆண்தான் அழகு. சிற்பி சிலை வடிவம் கொடுக்கும்
போது ஆண் சிலையை நிர்வாண மாகவேபடைப்பவன். துகில்
சுற்றியே பெண்ணைப்படைக்கிறான். நிர்வாணத்தில் ஆண்
தான் அழகனாகிறான். இதுதான் உண்மை

இந்தத்தொடர் பதிவு பல கோணங்களை எடுத்து வருகிறது.
அப்படி இருந்த போதிலும் நான் யாரையும் அழைக்கவில்லை
விரும்புபவர்கள் தொடரலாம். விடைபெறுகிறேன்.


2 comments:

Unknown said...

இதை நான் கவனிக்கவில்லை...
உங்கள் கவிதைப் பக்கத்தைத் தான் உங்கள் பிரதான பதிவு என நினைத்துக் கொண்டிருந்தேன்...

என்றாலும் வாழ்த்துக்கள்...

M.Thevesh said...

கனககோபி..
உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும்
நன்றிகள் பல