Tuesday, September 29, 2009

நகைச்சுவை:- ஜ. நா வின் கணக்கெடுப்பு

2005 ம் ஆண்டு அய் நா உலகம் முழுவதும் ஒரு
கணக்கெடுப்பு நடத்தியது. அந்த கணக்கெடுப்பில்
உலகின் மற்றப் பகுதியில் ஏற்பட்டுள்ள உணவுப்
பற்றாக்குறைக்கு என்ன தீர்வு என்று உங்கள்
உண்மையான அபிப்பிராயத்தைத்தெரிவியுங்க்ள்
என்று கேட்டிருந்தார்கள்.

அந்த அவர்களின் கணக்கெடுப்பு பெரும் தோல்வி
யைச்சந்தித்தது.

ஆபிரிக்காவில் உள்ளவர்களுக்கு "உணவு " என்
றால் என்ன என்று தெரியவில்லை.

இந்தியாவில் உள்ளவர்களுக்கு "உண்மை" என்
றால் என்ன என்று தெரியவில்லை.

அ ய்ரோப்பாவில் உள்ளவர்களுக்கு "பற்றாக்குறை"
என்றால் என்ன என்று தெரியவில்லை.

சீனாவில் உள்ளவர்களுக்கு "அபிப்பிராயம்" என்
றால் என்ன என்று தெரியவில்லை.

மத்தியகிழக்கில் உள்ளவர்களுக்கு "தீர்வு" என்றால்
என்ன என்று தெரியவில்லை.

தென் அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு " தயவு"
என்றால் என்ன என்று தெரியவில்லை.

அமெரிக்கர்களுக்கு " உலகின் மற்றப்பகுதி" என்
றால் என்ன என்று தெரியவில்லை.

2 comments:

Unknown said...

I என்பதை ஐ என்ற எழுத்திற்காக பயன்படுத்துங்கள். (நீங்கள் பாமினி எழுத்துமுறையை பயன்படுத்தினால்)

மற்றப்படி நல்ல நகைச்சுவை...
அதுவும் அமெரிக்கர்களுக்கு உலகின் மற்றப்பகுதி என்றால் என்னவென்று தெரியாதென்றீர்கள் பாருங்கள்? அசத்தல்...
வாழ்த்துக்கள்...

M.Thevesh said...

கனககோபி.
உங்கள் வாரவுக்கும் ஆலோசனைக்
கும் நன்றி.
என்னால் யூனிகோட் விசைபலகையில்
அய்னா என்ற எழுத்தைக்கண்டுபிடிக்க
முடியவில்லை.