Monday, July 27, 2009

[கவிதை இலக்கணம்]

கவிதைக்குரிய இலக்கணம் எனப்பார்த்தால் எதுகை, மோனை,
சீர் என்பன கவிதைக்குரிய இலட்சணமாகும். கவிதைகளில்
எதுகை முக்கியம். அதுதான் கவிதைக்கு இனிமைதருபவையா
கும். கவிதைஎழுதும் போது ஒவ்வொரு அடியின் ஆரம்பத்தில்
எதுகை இருந்தால்அது தனிச்சிறப்புப்பெறும். எதுகை என்பது பாட்
டின் வரிகளில்வரும் சொல்லின் இரண்டாவது எழுத்து ஒரே மாதிரி
அமையும். உதாரணத்திற்குஒரு கண்ணன் பாட்டு ஒன்றை எடுத்
துள்ளேன்.

"சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மாசெல்வக்களஞ்சியமே
என்னைக்கலிதிர்த்தே உலகில் ஏற்றம் புரியவந்தாய்.
"

முதல் வரியில், இரண்டாவது எழுத்து 'ன்' என்று வந்துள்ளது போல்
இரண்டாவதுவரியில் இரண்டாவது எழுத்து 'ன்' என்றுவந்துள்ளது.
இப்படி எதுகை அமையும் போதுஅந்தக் கவிதை சிறப்பு பெறும். முன்பு
வரும் சினிமா பாடல்கள் சாகா வரம் பெற்றவையாக, இன்றும் பலர்
விரும்பிக்கேட்பதற்குரிய காரணம் அந்தப்பாடலில் உள்ள கவிநயம்.
இசையுடன் சேர்ந்து கருத்து அழியாமல் மெல்லத் தவழ்ந்து வரும்
போது மனதிற்கு மகிழ்ச்சியையும் ஒரு மன அமைதியையும் கொடுக்
கின்றன. அப்படி அந்தபாடல்கள் அமைந்ததற்கு இந்த எதுகையும்
மோனையும் தான் வழி சமைத்தன என்றால்மிகை யாகாது.

இந்தக்காலக் கவிதைகள் வெறும் வசன நடையாகவே இருக்கிறது.
அதனால் தான் சமீபத்தில் வந்த எந்த ஒரு பாடலும், சாகா வரம்
பெறவில்லை. படம் திரையைவிட்டு அகன்றதும் அந்தப்படப்
பாடலும் காணாமல் போய்விடுகின்றன.

கண்ணதாசன், வாலி, மருதகாசி போன்ற கவிஞர்களின் படைப்புக்கள்
என்றும் அழியாமல் அலையில் தவழ்ந்து வருகின்றன.
இவர்கள் எவரும் சங்க காலப்பாடல் போல் கடும் இலக்கணத்துடன்
பாடல் இயற்றவில்லை. வெகு எழிய தமிழில் ஒத்த ஓசையுடைய
சொற்களைச்சேர்த்துக் கவிபுனைந்தவர்கள்.
சங்ககாலப் பாடல்கள் கடும் இலக்கணத்துடன் அமைந்தவை
சாதாரண மக்கள் பொருள் அறியும்வண்ணம் அப்பாடல்கள்
அமையவில்லை.சாதாரணமாக, யாவரும் பொருள்
அறிந்து கொள்ளக்கூடியதாக எந்த இலக்கணம் இல்லவிடினும்
எதுகைமோனை வரும்படியாகச் சொல்அமைத்து கவி
புனைந்தால்அந்தக்கவிதைகள் ஓசை நயம்மிக்க
கவிதைகளாக அமையும்.உதாரணத்திற்கு அடுத்த
ஒரு கண்ணன் பாடலை எடுத்துள்ளேன்

"அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை
ஆசைக்கும் உறவுக்கும் பேதமில்லை
இரவுக்குப்பகலிடம் கோபமில்லை
ஏழையின் காதலில் பாபமில்லை
"

இப்பாடலை இராகம்(Tune) இல்லமல்பாடினாலும் இனிமையாகவே
இருக்கிறது.கண்ணதாசன் சங்க காலத்தமிழில் பாடல்
புனையவில்லை சாதாரண தமிழில்தான் அவர் கவிதை
புனைந்தார். அவர் புனைந்த அத்தனை கவிதைகளிலும்,
எதுகை மோனை கண்டிப்பாக இருக்கும். கவிதைக்கு ஓசை நயம்
மிக மிகஅவசியம். கவிதைக்குதான் இராகம்
போடவேண்டுமே அல்லாமல் இராகத்திற்காகக் கவிதை
எழுத முயலக்குடாது என்பது என் அபிப்பிராயம்.

அமைந்து விட்ட எதுகை மோனையுடன் சந்தம் நிறைந்த
பாடலுக்கு இராகம்போடும்போது பாடலுடன் இணைந்து
இராகம் வரும்போது அந்தப்பாடல் எல்லோர் மனதையும்
கவர்ந்த பாடலாக அமைந்து விடுகிறது. அத்துடன் சாகா
வரத்தையும் பெற்றுவிடுகிறது. இராகத்திற்காகப்
பாட்டுஎழுதும் போது கவிதைக் கிருக்கிற எந்த
இலக்கணமும் இல்லததால் இராகம் இல்லாமல்
பாடலைப்பாடினால் அது வசன நடையாகவேவரும் என்பது
முற்றிலும் உண்மை. இது எப்படி இருக்கிறதென்றால்
குதிரைவண்டிக்கு முன்னால் பூட்டவேண்டிய குதிரையை
வண்டியின் பின்னால் பூட்டியமாதிரி
இருக்கிறது

ஆகையால் கவிதை இலக்கணம் என்று நான் சங்க கால
இலக்கணத்தைக்குறிப்பிடவில்லை.கண்ணதாசன் கால
கவிதை இலக்கணத்தைக் கைக்கொணடு எதுகை மோனை
வரும் வண்ணம் கவிதை புனைவதையே இங்கு நான்
குறிப்பிட்டுள்ளேன்.

கடைசியாக கவிதை, கவிதைக்குரிய இலக்கணங்களுடன்
வெளிவரவேண்டும். அப்போது தான் தமிழ் தமிழாக இருக்கும்
என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
[ This article explain the minimum rules to be
followed when composing a poem.]

2 comments:

நண்பர்கள் உலகம் said...

எதுகை பற்றிய விளக்கம் அருமை.அது போலவே, மோனை,சந்தம் பற்றியும் விளக்கியிருக்கலாமே?
என்னுடைய முகவரியில் தெரிவிப்பீர்களா?

Anonymous said...

nice explain...