Wednesday, November 04, 2009

ஈழத்தில் சினிமாச்சீரழிவு தேவையா?

இந்தியத்தமிழரின் கலாச்சார சீரழிவுக்கு சினிமா என் கின்ற
கனவுத்தொழிர்சாலையே முக்கிய காரணம். இதை பல இந்தி
ய அறிஞர்களே சொல்லியுள்ளார்கள். ஈழத்து இளைஞர்களி
டம் சினிமா மோகம் அல்லது சினிமா வெறிஇருக்காததினால்
அவர்கள் எல்லோரும் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்
துள்ளார்கள். இந்திய இளைஞர்களிலும் பார்க்க கலாச்சார விழு
மியங்களில் ஈழத்து இளைஞர்கள் சிறந்து விளங்குவதற்கும்
ஈழத்தில் சினிமா இல்லாமல் இருப்பது முக்கியகாரணமாகிறது.

சினிமாத் தொழிற்ச்சாலை பரத்தைத்தனத்தை ஊக்குவிப்பதில்
முன்னணி வகிப்பதாக பல இந்திய கலாச்சார ஆவலர்கள் தெரி
வித்துள்ளார்கள்.சமிபத்தில் வெளிவந்த புவனேஸ்வரி விவகாரங்
கள் அதன் தொடர்ச்சியாக வந்த நடிகர் சங்க ஆர்ப்பாட்டங்கள் எவ்
வளவுதூரம் சினிமா சீரழிந்து போய்யுள்ளதற்குரிய ஆதாரங்களா
கும். இந்நிலை ஈழநாட்டிலும் வரவேண்டுமா என்பதை ஈழத்தமிழர்
சீர்தூக்கிப்பார்க்கவேண்டும்.சினிமாவினால் ஏற்படும் கலாச்சாரச்
சீரழிவைக் கண்டுகொண்ட தமிழ் ஈழத்தலைவர் பிரபாகரன் தன்
ஆளுகைக்குட்பட்ட்பிரதேசங்களில் தமிழ்நாட்டு ஆபாசச்சினிமாவை
முற்றாகத்தடைசெய்திருந்தார்.அத்துடன் ஈழமக்கள் நூறு சத வீதம்
கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்ததால் சினிமாவின் சீர்கேடுக
ளை அறிந்து அதை ஒரு பொழுதுபோக்கும் சாதனமாகவே நிலை
நிறுத்திக்கொண்டார்கள்.

றேடியோ பாகங்களை உற்பத்திசெய்யும்
தொழிற்சாலைநடத்திச்செல்வந்தரான வி.பி.கணேசன் ஈழத்துச்சினி
மாதயாரிப்பில் இறங்கி நொடிந்து போன நிலையை அவரின் மகனி
டங்கேட்டால் உண்மை தெரியும்.

பொருளாதார ரீதியில் சினிமா
தயாரிப்பு வெற்றி பெறுமா என்பது கேழ்விக்
குரியதே.ஈழத்தில் வெளி வரும் சஞ்சீகைகளுக்கே வரவேற்பு
இல்லாத நிலையில் ஈழத்துச்சினிமாவெகுஜன ஆதரவைப்பெறுமா
என்பது ஆராயப்படவேண்டியவிடயமாகிறது.இன்று இந்தியச்சினிமா
புலம்பெயர்ந்த தமிழரின் ஆதரவில் தங்கியிருந்தாலும் எங்கள்
ஈழத்து மக்கள் ஈழத்தமிழ் சினிமாவை ஆதரிப்பார்களா என்று வினா
வினால்இல்லை என்றே விடைகிடைக்கும். இந்தியப்படங்களுக்குத்தடை
விதித்திருந்த கால கட்டத்தில் ஈழத்தில் தாயாரித்தபடங்கள் ஓட்டப்பட்ட
னவே அல்லாமல் அதுவாக ஓடவில்லை என்பதுதான் யதார்த்தம்.


2 comments:

Kiruthikan Kumarasamy said...

சினிமா ஒரு நல்ல ஊடகம் தேவேஷ்.. என்ன, சரியாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஒரு சிக்கல் இருக்கிறது. மற்றது இந்திய இளைஞர்களை விட இலங்கை இளைஞர்கள் கலாசாரத்தில் சிறந்து விளங்குகிறார்கள் போன்ற கட்டமைப்புகள் உடைந்து பல காலம் ஆயிற்று. பொத்திப் பொத்தி வைத்தாலும் கத்தரிக்காய் முத்திக் கடைவீதி வந்தேதான் ஆகவேண்டும். சில விஷயங்கள் முட்டாள்தனமாகப் பொத்தப்பட்டு, அந்தப் பொத்தலாலேயே விஸ்வரூபம் பெற்றன என்பதை இங்கே சொல்லியாகவேண்டும். இன்னும் சிம்பிளாகச் சொல்வதானால், யாழ்ப்பாணத்தில் போய்ஸ் படத்தைத் தியேட்டரில் ஓடத் தடை விதிக்கப்பட்டது. விளைவு போய்ஸ் பட சி.டி. கிட்டத்தட்ட ஒவ்வொரு விடலையில் கையிலும் சிக்கியதுமட்டுமே.

Thevesh said...

Kiruthikan Kumarasamy:
உங்கள் வரவுக்கும் கருத்துகளுக்
கும் நன்றிகள்.